பிக்பாஸ் வீட்டில் சூடுபிடிக்கும் வாதங்கள்- அசீமை வெளியேற்ற சூழ்ச்சி
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கிடையே வாத பிரதிவாதங்கள் சூடுபிடித்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சி 44 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் அரைவாசிக்கும் மேல் சின்னத்திரை பிரபலங்கள் தான் கலந்துக் கொண்டுள்ளனர். இதனால் மக்களின் ஆதரவு இந்நிகழ்வுக்கு அதிகமாகவே இருக்கிறது.
இதற்கயை மக்களின் வாக்களிப்புக்குமையவே இதிலுள்ள போட்டியாளர்களும் வெளியேற்றப்படுகிறார்கள். இதன்படி தற்போது வரை சுமார் 5 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புதிய டாஸ்க்
இந்நிலையில் ஆறாவது வாரத்திற்காக நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இன்றைய தினம் ராம் நீதிபதியாக இருக்கிறார்.
இதில் வாத பிரதிவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகள் அனைத்தும் போட்டியாளர்கள் வீட்டிற்கு வந்ததிலிருந்து அவர்களின் மனதை பாதித்த விடயங்களாகும்.
மேலும் கடந்த வாரம் அசீம் மற்றும் ஏடிகேவிற்கு நடந்த சண்டைகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாத பிரதி வாதங்கள் இடம் பெற்று வருகிறது.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.