தென்னிந்திய நடிகர்களை மிஞ்சும் திரைப்பட விமர்சகர் பயில்வானின் சொத்து மதிப்பு
திரைப்பட நடிகர் பத்திரிக்கையாளர் மற்றும் விமர்சகராக இருந்து வரும் பயில்வான் ரங்கநாதனின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பயில்வான் ரங்கநாதன் சொத்து மதிப்பு
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், திரைப்பட விமர்சகராகவும் அறியப்படும் பயில்வான் ரங்கநாதன் தூத்துக்குடி மாவட்டம், சிறுதொண்ட நல்லூரை சேர்ந்தவர்.
இவர் தனது தொழிலுக்காக தனது சொந்த ஊரை விட்டு சென்னையில் வசித்து வருகிறார். தூத்துக்குடியில் உள்ள, சிறீ முத்துமலையம்மன் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்த இவர், சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார்.
கல்லூரி காலத்தில் இருந்தே பளுதூக்குதலில் ஆர்வம் காட்டி வந்தார் பயில்வான் ரங்கநாதன். இவருக்கு நடிகராகுவதற்கு முன்னர் காவல் துறையில் பணியாற்ற ஆர்வம் அதிகமாக காணப்பட்டது.
இவர் அடிக்கடி ஆணழகன் போட்டியிலும் கலந்து கொள்வார். இதற்காக இவருக்கு மிஸ்டர் சென்னை பட்டம் கொடுக்கப்பட்டது. பயில்வான் ரங்கநாதன் முந்தானை முடிச்சு படத்தில் வைத்தியர் வேடத்தில் நடித்து சினிமாத்துறையில் பிரபலமானார்.
இதை தொடர்ந்து இவர் சுமார் 75 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகராக இருந்த போது ஒரு படத்திற்கு 1 லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரைக்கும் சம்பளம் பெறுவாராம். இது அவர் நடிக்கும் திரைப்படத்தின் கதாபாத்திரங்களை பொறுத்தே அமையும்.
தற்போது திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு திரைப்பட விமர்சகராகவும் பத்திரிக்கையாளராகவும் இருந்து வருகிறார். அந்த வகையில் இவரது சொத்து மதிப்பு பூர்வீக சொத்து எல்லாமாக சுமார் 20 கோடிக்கும் மேல் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இது தவிர இவர் சொந்தமாக யூடிப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன் மூலமும் இவர் கோடிகளில் வருமானம் பெறுகிறார் ஆனால் இது குறித்த வருமானம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |