நடிகர் விஜயகுமார் பேத்தி தியாவிற்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா?
பிரபல மூத்த நடிகரான விஜயகுமாரின் பேத்தி தியா-வின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் மகள் அனிதா விஜயகுமார், இவர் ஒரு மருத்துவர். இவரது கணவர் கோகுல் கிருஷ்ணன், இவரும் ஒரு மருத்துவர்.
இத்தம்பதிகளின் மகள் தியா-வின் திருமணம் கோலாகலமாக சொந்தபந்தங்கள் படைசூழ திரையுலக நண்பர்கள் மத்தியில் நடந்தேறியது.
தியாவுக்கும், மணமகன் திலனுக்கும் கடந்தாண்டு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் கடந்த 19ம் திகதி மகாபலிபுரம் பீச் ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்துள்ள பேட்டியில், விஜயகுமார் தனது மூத்த தாரத்து மகள்களை மருத்துவராக்கி விட்டார், அனைவருமே மருத்துவர்கள், மகன் அருண் விஜய்யும் பிரபலமான மருத்துவரின் மருமகன்.
கோடிக்கணக்கில் சொத்து இருப்பதால் சீதனத்தை அள்ளிக்கொடுத்துள்ளனர், கல்யாணத்துக்கே கோடிக்கணக்கில் செலவழித்து விட்டனர்.
சீதனமாக இரண்டு பங்களாவையும், 300 சவரன் நகையையும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் மணமகன் தியாவின் காலை தொட்டு கும்பிடுகிறார், எந்த பிரபலங்களின் திருமணத்திலும் இப்படி பார்த்தது இல்லை, எதற்காக மணமகன் இப்படி செய்தார் என்றும் தெரியவில்லை என கூறியுள்ளார்.