கண்ணம்மா அதிரடி! அடுத்தடுத்த முடிவுகளினால் களங்கி நின்ற பாரதி
பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாத கண்ணம்மா குழந்தைகளை அழைத்து கொண்டு பிரிந்து செல்லும் முடிவை எடுத்து பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பரபரப்பான கட்டத்தில் பாரதி கண்ணம்மா உள்ளது.
இறுதி கட்டத்தில் பாரதி கண்ணம்மா
தற்போது வைரலாகும் ப்ரோமோவில் கண்ணம்மாவின் முடிவை பார்த்த ரசிகர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு பேப்பரை வைச்சு தான் என்கூட வாழணும்னு முடிவு பண்ணுவீங்களா? இவ்வளவு நாளில் ஒருநாள் கூட இந்த பிள்ளைகள் உங்க குழந்தை என்று தோணலை தானே.
என் உயிரை கொடுத்து உங்களை காப்பாத்தியும் கூட, என்கூட சேர்ந்து வாழணும்னு உங்களுக்கு தோணவில்லை என்று சரமாரியாக கேள்வி கேட்க பாரதி பதில் பேச முடியாமல் தவிக்கிறான்.
குழந்தைகள் இருவருமே நீங்க யாருமே எனக்கு வேணாம் என கண்ணம்மாவுடன் செல்கின்றனர். அவளும் ரெண்டு குழந்தைகளை அழைத்து கொண்டு கிளம்புகிறாள்.
நன்றி கூறி பிரிந்த கண்ணம்மா
அதன்பின்னர் மீண்டும் பாரதியிடம் வந்து எல்லாத்துக்கும் நன்றி கூறுகின்றார்.
பாரதி கண்ணம்மாவாக இருந்த என்னை இன்று பாரதிக்கண்ட கண்ணம்மாவா மாற்றியது நீங்கள் தான். எல்லாத்துக்கும் மிக்க நன்றி.
என் குழந்தைகளை இனி நானே பார்த்து கொள்ளுவேன் என்று பிரிகின்றார். இத்துடன் சீரியல் முடியுமா? அல்ல தொடர்ந்து குழந்தைகள் வளர்ந்த பின்பும் கதை தொடருமா என்பது ஒரு சில நாட்களில் தெரிந்து விடும் அது வரை காத்திருக்கலாம்.