இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கும் வாழைப்பூ வடை.... இப்படி செய்து கொடுங்க
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய காய்கறிகளின் பட்டியலில் வாழைப்பூ முக்கிய இடம் வகிக்கின்றது.
ஆனால் அதனை சுத்தம் செய்து நறுக்கிஎடுப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதால் பெரும்பாலானவர்கள் இதனை தங்களின் சமையல் மெனுவில் இருந்து தவிர்த்து விடுவார்கள்.

ஆனால் வாழைப்பூவில் மற்ற காய்கறிகளை விடவும் இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் செரிந்து காணப்படுகின்றது.
இதை வாரம் ஒருமுறை சாப்பிட்டாலே நமக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும். இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வாழைப்பூவை கொண்டு அசத்தல் சுவையில் மொறுப்பான வடை செய்யும் எளிய முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
வாழைப்பூ - 50 கிராம்
பெரிய வெங்காயம் -2 ( நறுக்கியது)
உப்பு- தேவையான அளவு
துவரம் பருப்பு -100 கிராம்
மிளகாய் தூள் -1 தே.கரண்டி
தனியாத்தூள் -1 தே.கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி
கொத்தமல்லி -சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
முதலில் துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் சேர்த்து ஊற வைத்துவிட வேண்டும். பின்னர் வாழைப்பூவையும் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கொத்தமல்லி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் நன்றாக கலந்துவிட்ட பின்னர் அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள வாழைப்பூவை ஒரு மிக்சியில் ஒரு அடி அடித்து அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஊற வைத்த பருப்பையும் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அந்த கலவைளுடன் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையை நன்றாக கலந்து விட்டு ஐந்து நிமிடம் அப்படியே விட்டுவிட வேண்டும்.
வடை போல் தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு என்னையே சூடு ஆக்கிய பிறகு போட்டு பொரித்து எடுத்தால் அவ்வளவு தான் அருமையான சுவையில் மொறு மொறுப்பாக வாழைப்பூ வடை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |