மறைந்த பாடும் நிலா எஸ்.பியின் புதிய சாதனை! பெருமை கொள்ளும் இந்தியர்கள்
பாடும் நிலா என்ற அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு மத்திய அரசு பத்ம விபூஷன் விருதை அறிவித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுவாழ்வு, கலை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படும்.
நாளை நாடு முழுவதும் 72ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று பத்ம விருதுகளை மத்தி அரசு அறிவித்துள்ளது. அதன்படி மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உள்ளிட்ட ஏழு பேருக்குப் பத்ம விபூ,ன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட இவருக்கு, தமிழ் மொழியைப் படிக்கத் தெரியாது. தமிழ பாடல்களை தெலுங்கில் எழுதி வைத்துக்கொண்டு, அதைச் சரியான உணர்வு மற்றும் உணர்ச்சியுடன் வெளிப்படுத்துவார். தமிழ், தெலுங்கு, கண்டனம் என பல மொழிகளிலும் டாப் பாடகர்களில் ஒருவராக எஸ்பிபி திகழ்ந்தார்.
தொடர்ந்து பாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என ஆக்டிவாக இருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கடந்தாண்டு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மருத்துவமனையில் பல நாட்களுக்குத் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி உயிரிழந்தார்.
அவர் தனது கடைசிப் பாடலை ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படத்திற்கா பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.