லண்டனில் பஸ்ஸில் ஏறி குத்தாட்டம் போடும் பிரபலம்: வைரலாகும் வீடியோ
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பாலா லண்டனிலுள்ள பஸ்ஸில் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாலா
பாலா என்பவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இவரது கடின உழைப்பால் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே சேமித்து வைத்திருக்கும் பிரபலங்களில் ஒருவர்.
இதனையடுத்து சில அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கி அவருக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு.
வைரல் வீடியோ
இந்நிலையில் மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து பிரபலமான இவர் தற்போது நிகழ்ச்சிக்காக லண்டனுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பேருந்தில் ஏறி வெளிநாட்டவர்கள் நடுவே மாஸ் ஆக நடனம் ஆடியுள்ளார்.
இந்த வீடியோவை பாலா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகிறார்கள்.