பாலாவின் ‘வணங்கான்’ படப்பிடிப்பின் போது நடிகை மீது தாக்குதல்- போலீசில் பரபரப்பு புகார்
‘வணங்கான்’ படப்பிடிப்பின் போது நடிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
இயக்குநர் பாலா
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாலா. இவர் ‘நந்தா’, ‘பிதாமகன்’, உள்ளிட்ட பல முக்கிய படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் பங்கு இயக்குநர் பாலாவிற்கு உண்டு.
பாலாவை நம்பி பல கோடி இழந்த நடிகர் சூர்யா
இதனையடுத்து, ஆரம்பத்தில் நடிகர் சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணி மீண்டும் இணைந்தது. ‘நந்தா’, ‘பிதா மகன்’ படத்தின் மூலம் சூர்யாவிற்கு அடையாளத்தை தேடி கொடுத்தவர் இயக்குநர் பாலா. இதனையடுத்து இவர்கள் மீண்டும் ‘வணங்கான்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்தனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது. ஆனால், திடீரென படப்பிடிப்பை நிறுத்திவிட்டு நடிகர் சூர்யா சென்னை திரும்பினார். இது சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் சூர்யாவிற்கும், இயக்குநர் பாலாவிற்கும் ஏதோ பிரச்சினை காரணமாக இந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்று தகவல் வெளியானது.
நடிகை மீது தாக்குதல்
இதனையடுத்து, நடிகர் சூர்யாவிற்கு பதிலாக ‘வணங்கான்’ படத்தில் நடிகர் அருண்விஜய் நடித்து வருகிறார். இவருக்கு ஹீரோயினியாக ரோஷினி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாக்குமரியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தில் துணை நடிகர்கள், துணை நடிகைகள் கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்டு நடித்து வருகிறார்கள். அவர்களை ஜித்தின் என்பவர் கவனித்து வரும் பொறுப்பில் உள்ளார். ஆனால், பாதி நாட்கள் படப்பிடிப்பு நடந்த பிறகு, துணை நடிகர், நடிகைகளுக்கு சம்பளத்தை ஒருங்கிணைப்பாளர் ஜித்தின் கொடுக்கவில்லையாம்.
இதனையடுத்து, துணை நடிகை லிண்டா, ஜித்தினிடம் சென்று சம்பளத்தை கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுக்க, இருவருக்குள்ளும் சண்டை எழுந்துள்ளது. இந்த சண்டை பிறகு கைகலப்பாக மாறியுள்ளது. இந்த தாக்குதலில் நடிகை லிண்டாவை ஜித்தின் கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் பின்பு, துணை நடிகை போலீஸிடம் சென்று ஜித்தின் மீது புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கை பதிவு செய்த போலீசார் ஜித்தினிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரச்சினை இல்லாமல் சென்றுக்கொண்டிருந்த பாலா படத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.