ஆரி தான் டைட்டில் வின்னர்: நண்பரின் உருக்கமான வேண்டுகோள்
பிக்பாஸ் சீசன் 4ல் தன்னுடைய நண்பரான ஆரிக்கு அதிகளவு வாக்குகள் அளிக்குமாறு வேண்டுகோள் அளித்துள்ளார் அவரது நண்பரான சௌந்தரராஜா. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 4ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த சீசனின் இறுதிகட்ட போட்டியாளர்களாக ரியோ, ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி ஆகிய 6 மட்டுமே எஞ்சியுள்ளனர். யார் வெற்றியாளர் என்பது இன்னும் 5 நாட்களில் தெரியவரும், இதற்கிடையே சமூகவலைத்தளங்களில் ஆரி தான் ஜெயிக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஆரிக்கு நிறைய ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்குமாறு நடிகரும், ஆரியின் நண்பருமான செளந்தரராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், எல்லாருக்கும் ஓட்டு போடுங்க, என் நண்பன் ஆரிக்கு அதிக ஓட்டுக்கள் போட்டு ஜெயிக்க வைத்து டைட்டில் வின்னர் ஆக்குங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
என் நண்பன் நடிகர் @Aariarujunan ஆரி அர்ஜுனாவிற்கு @vijaytelevision இன் #bigboss விளையாட்டு போட்டியில் நிறைய ஓட்டு போட்டு ஜெய்க்க வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ? #bigbosstamil4 #BigBossTamil #BigBoss4 #bigboss #AariArujunan #VijayTV pic.twitter.com/aLBHp03EMr
— Soundara Raja Actor (@soundar4uall) January 11, 2021