பிக்பாஸ் வீட்டில் கேமரா முன் பழைய காதலை பற்றி கூறிய பாலா.. அதிக கோபத்திற்கு இது தான் காரணமா? வைரல் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 99 நாட்களை கடந்த நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய போகிறது. இதனையடுத்து யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இன்றைக்கான நிகழ்ச்சியில் பாலா கேமரா முன் எல்லாருமே என்னை கெட்டவனா நினைச்சிட போறங்க.. கோபத்தில தான் ஒரு சில வார்த்தைகளை விட்டேன் நான்.. சீரியஸா நான் ஒரு ஐந்து வருஷமாத்தில கடைசியா எனக்கு ப்ரேக் அப் ஆன அப்போ தான் ரொம்பவே கோவப்பட்டேன்.. அதுக்கு அப்புறம் நான் கோபப்பட்டதே இல்லை..
எல்லாத்துக்குமே ஒதுங்கி போய்டுவேன். ஆனா, இங்கே உழைச்ச உழைப்பு அங்கீகாரம் கிடைக்காம சோம்பேறி என கூறினால் கோபம் வர தான் செய்யும் எனவும், தனக்காக நான் அதெல்லாம் கோபத்தில் தான் செய்தேன் என மன்னித்து ஓட்டி போட்டத்துக்கு ரொம்பவே எமோஷனல் ஆகிட்டேன்.. என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.