பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தும் ஆரி பக்கமே திரும்பாத அர்ச்சனா.. பாலாவை தூண்டிவிட்டது என்ன தெரியுமா?
பிக்பாஸ் 4 நிகழ்ச்சியனாது இந்த வாரத்தில் நிறைவடைய போகிறது. யார் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஏற்கனவே எவிக்ட்டான போட்டியாளர்களான அர்ச்சனா, ரமேஷ், ரேகா மற்றும் நிஷா ஆகியோர் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
வந்ததுமே, சிறு பிள்ளைகள் போல் போட்டியாளர்களிடம் விளையாடி வந்தனர். அதன் பின்னர், அனைவரையும் அழைத்து அழைத்து ஒரு முறைக்கு பலமுறை கட்டியணைத்தார் அர்ச்சனா. இறுக்கிப் பிடித்து முத்தமெல்லாம் கொடுத்தார். ஆனால், ஆரி பக்கம் மட்டும் திரும்பவே இல்லை. ஆரியே தானாக சென்று அவரை அணைத்தார். வாத்தி கம்மிங் பாடலுக்கும் ஆடினார்.
அப்போதும் ஆரியின் முகத்தை ஏறேடுத்துக் கூட பார்க்கவில்லை. மேலும், அடுத்து பாலாஜியிடம் சென்ற அர்ச்சனா, உன்னை நினைத்து நான் பெருமை படுகிறேன். 105 நாட்கள் மக்கள் இங்கு இல்லை. நாம்தான் இருந்தோம். அதனால் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும் சந்தேகத்தின் பலனை மக்களுக்கு கொடுத்துவிடுவோம் என்றார்.
இதனால், அர்ச்சனா கொஞ்சமும் மாறாமல் பழைய பழிவாங்கும் குணத்துடனேயே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாவின் முகத்திரையை மீண்டும் கிழித்தனர்.
மேலும் அன்பு கேங் மட்டும் மீண்டும் ஒன்றாகவே செயல்பட்டு அன்பை பரிமாறுவதும் தெளிவாக புரிகிறது.