கடும் கோபத்தில் கடுப்பாகி கமல் செய்த வேலை? கண்ணீருடன் விடைபெற்ற ஷிவானி.. முதல் ஆளாய் கட்டியணைத்து கலங்கிய பாலாஜி
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவானி நாராயணன் கண்ணீருடன் வெளியேறினார் . முதலில் ஏனைய போட்டியாளர்கள் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார்.
இறுதியில் ஷிவானியா கேபியா என்ற நிலையில் ஹவுஸ்மேட்ஸிடம் யார் இருக்க வேண்டும் என்று கமல் கேட்டார். அதற்கு ஹவுஸ் வாயே திறக்காததால் கடுப்பான கமல், சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது எனக் கூறி ஷிவானியின் பெயரை அறிவித்தார்.
எவிக்ஷன் கார்டில் தனது பெயரை பார்த்ததுமே கண்கள் கலங்கினார் ஷிவானி. பின்னர் இதோ வருகிறேன் என்பதை போல் எழுந்து நின்றார் ஷிவானி. அவரை முதல் நபராக வந்து கட்டியணைத்து ஆறுதல் கூறினார் பாலாஜி. பின்னர் கேபி, ரம்யா, ஆரி, சோம், ரியோ என அனைவரும் கட்டியணைத்து அவருக்கு ஆறுதல் கூறினர்.
ஷிவானியிடம் பேசிய பாலாஜி, உன்னை நினைச்சு நான் பெருமை படுகிறேன் என்றார். மேலும் கனத்த இதயத்துடன் சொல்கிறேன் உன் மேல் நிறைய மரியாதை வச்சுருக்கேன் என்றார்.
பின்னர் தனது உண்டியலை உடைத்து எல்லோருக்கும் காயின்களை பிரித்துக்கொடுத்தார் ஷிவானி. ஷிவானிக்கு சிங்கப்பெண்ணே பாடலை பாடி பிரியா விடை கொடுத்தனர் ஹவுஸ்மேட்ஸ். பிக்பாஸ் வீட்டில் பூத்த பூக்களையும் பறித்து கொடுத்து பரிசு அளித்தனர்.
அதனை தொடர்ந்து ரைமிங்காக இங்க உங்களுக்கு நடந்ததெல்லாம் டெஸ்ட்.. வெளியே நடக்கப் போறதுக்கு ஆல் த பெஸ்ட் என்று ஷிவானி ஸ்டைலில் கூறினார் பிக்பாஸ். இதனைக் கேட்டு ஹேப்பியான ஷிவானி, நன்றி கூறி கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாய் வெளியேறினார்.