நேர்மைதான் ஜெயித்தது…. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்களை மான பங்கம் செய்யும் நெட்டிசன்கள்
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே வாரமாக இருக்கப் போகிறது. வரும் 17 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே கொண்டாடப்படவுள்ளது.
இதனால் வரும் வாரம் போட்டிகள் நிறைந்த கடுமையான வாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது-. இந்த வாரம் முதல் ஆளாக ஆரி சேவ் ஆகியதை நெட்டிசன்கள் மீம் போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.
ஆரி கேப்டனாக இருந்ததை தவிர்த்து மற்ற அனைத்து வாரங்களிலுமே சக ஹவுஸ்மேட்டுகளால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வாரம் அனைத்து ஹவுஸ்மேட்ஸும் நாமினேஷனுக்கு வந்த நிலையில் யார் முதலில் சேவ் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே மக்கள் அவருக்கு அதிக வாக்குகளை அள்ளிக் கொடுத்து முதல் ஆளாய் காப்பாற்றினர். இந்நிலையில் நெட்டிசன்கள் நேர்மை ஜெயித்து விட்டதாக கூறிவருகின்றனர்.