உறங்கும் போது தாலி கழன்று விழுந்தால் சுபமா,அசுபமா? ஜோதிட விளக்கம்
திருமணம் செய்துகொண்ட பெண்கள் உணங்கும் போது அவர்கள் கழுத்தில் உள்ள தாலி கழன்று விழுந்தால் என்ன அசுபமா சுபமா என்பதை விரிவாக பார்க்கலாம்.

தாலி
பொதுவாக தமிழ் பெண்கள் என்றால் திருமணமானவுடன் தாலி அறிந்திருப்பார்கள். இந்த தாலிக்கயிறு பற்றி பல விடயங்கள் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
இது கழன்று விழுந்தாலோ அல்லது தொலைந்து போனாலோ கணவனுக்கு அபசகுணம் என்று கூறுவார்கள். மேலும் இதற்காக பரிகாரம் செய்வார்கள்.

சிலர் இதை தங்கள் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தி அபசகுணமாக பார்க்கின்றனர். பொதுவாக தாலி இரண்டு வருடத்திற்க ஒருமுறை மாற்றப்படும்.
சிலர் சடங்குகள் முறையில் அதற்கு முன்னரும் மாற்றிக்கொள்வார்கள்.
இப்படி இந்த தாலிக்கென்று பல விடயங்கள் இருக்க திருமணமான பெண் உறங்கிக்கொண்டு இருக்கும் போது அவர்கள் கழுத்தில் உள்ள தாலி கழன்று விழுந்தால் அதற்கு என்ன பலன் என்பதை பதிவில் பார்க்கலாம்.

என்ன பலன்
ஜோதிடத்தில் தாலி பார்வதிதேவியின் அம்சமாக பார்க்கப்படுகின்றது. திருமணமான ஒரு பெண்ணின் அடையாளமாக இந்த தாலி கருதப“படுகின்றது. அதிலும் கணவன் மனைவி பந்தத்தை இந்த தாலியை வைத்து தான் நிர்ணயிக்கிறார்கள்.
திருமணத்தின் போது ஒன்பது இழைகளைக் கொண்டே மாங்கல்யம் அணிவிக்கப்படும். இந்த ஒன்பது இழைகளும், வாழ்க்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கும் எனப்படுகின்றது.
கணவன் மனைவியை விட்டு தூரத்தில் இருக்கும் போது அந்த மனைவி கணவனை நினைத்து மாங்கல்யத்தில் குங்குமம் வைத்துக்கொண்டால் கணவனுக்கு நல்லவை நடக்கும் என்று நம்பப்படுகின்றது.

இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் தாலி தொலைந்தாலோ துஜங்கும் போது கழன்று விழுந்தாலோ மக்கள் அச்சம் கொள்கின்றனர். அந்த வகையில் இது பற்றி ஜோதிடர் கூறும் போது நாம் “நன்கு உறங்கும் நிலையில் தாலி கயிறு தொலைந்தால் அது நன்மைதான் என கூறுகிறார்.
அதாவது அவர் மேலும் கூறுகையில் நாம் ஒரு சகுனத்தை கணிப்பிடும் போது நம்மை மீறிய விஷயங்களை தான் நாம் நம்ப வேண்டும். இப்போது உதாரணத்திற்கு
நாம் வெளியே செல்லும் போது நமது மேலே வானத்தில் கருடன் பறந்தால் நாம் செல்லும் காரியம் நிறைவேறும். இது நம்மை மீறிய விஷயம்.

இதுபோன்ற விஷயங்களை நாம் நம்பலாம் ஆனால் எதுவும் இல்லாமல் சாதாரணமாக நடக்கும் விஷயங்களை கண்டு பயப்பட கூடாது.
இந்த விஷயங்கள் நடந்தால் தாலி பலன் அதிகமாகுமே தவிர அதற்கு பங்கம் வராது. எனவே இதுபோன்ற விஷயங்களை கண்டு அஞ்சாமல் அதற்கு பதிலாக புது கயிறு மாற்றி கொள்வது நல்லது” என்று ஜோதிடர் கூறி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |