கெட்டுப்போன அரிசியை எவ்வாறு கண்டுபிடிப்பது? நீண்ட காலம் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
அரிசி மிகவும் முக்கியமான உணவு ஆகும். பெரும்பாலான வீடுகளில் தினமும் அரிசி சமைக்கப்படுகிறது. அரிசியை மிக எளிதாக அதே நேரத்தில் குறுகிய நேரத்தில் சமைக்கலாம். ஆனால் நீண்ட காலம் அரிசி கெடாமல் இருக்குமா என்பது கேள்விக்குறியே. ஆனால் வெள்ளை அரிசியை 3 முதல் 4 ஆண்டுகள் வரை கெடாமல் வைத்திருக்க முடியும். ஆனால் சிவப்பு அரிசியை சமையல் அறையில் 8 மாதங்கள் வரை கெடாமல் வைத்திருக்கலாம்.
அதே நேரத்தில் குளிா்சாதனப் பெட்டியில் ஒரு ஆண்டு வரை கெடாமல் வைத்திருக்கலாம். அரிசியை எவ்வாறு நீண்ட காலத்திற்கு கெடாமல் வைத்திருக்கலாம் என்பதற்கான குறிப்புகளை இங்கு பாா்க்கலாம். காற்று புகாத பாத்திரங்கள் அரிசியை காற்றுப் புகாத பாத்திரங்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்தால் நீண்ட காலம் கெடாமல் பாதுகாக்கலாம்.
குறிப்பாக கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களில் போட்டு வைக்கலாம். அதன் மூலம் அரிசியில் ஈரப்பதம் அண்டாமல் நீண்ட காலம் கெடாமல் இருக்கும். வேப்பிலை அல்லது காய்ந்த மிளகாய் அரிசியை போட்டு வைத்திருக்கும் பாத்திரங்களில் வேப்பிலை அல்லது காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் பூச்சிகள் தாக்காமல் இருக்கும். 4 அல்லது 5 வேப்பிலை அல்லது காய்ந்த மிளகாயை அாிசி பாத்திரங்களில் போட்டு வைக்கலாம்.
இந்த உத்தியை பெரும்பாலான பெண்கள் பின்பற்றி வருகின்றனர். குளிர்வித்தல் குளிரூட்டப்பட்ட பாத்திரங்களில் அரிசியை போட்டு வைத்திருந்தால் அவை நீண்ட காலம் கெடாமல் இருக்கும். நமக்குத் தேவைப்படும் போது அந்த பாத்திரங்களில் இருந்து தேவையான அரிசியை எடுத்துப் பயன்படுத்தலாம். மீதம் இருக்கும் அரிசி நீண்ட நாட்கள் பாதுகாப்பாகவும் அதே நேரத்தில் பூச்சிகள் அண்டாமலும் இருக்கும். கெட்டுப்போன அரிசியை எவ்வாறு கண்டுபிடிப்பது? அரிசியில் ஸ்டாா்ச் அதிகம் உள்ளது.
ஸ்டாா்ச் உள்ள பொருட்களில் பாக்டீாியாக்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யும். அரிசியை சாியாகப் பாதுகாக்கவில்லை என்றால் அவை விரைவில் கெட்டுவிடும். அரிசியை காய ஆரம்பித்துவிட்டால் அதில் பூஞ்சைகள் உருவாகிவிடும். அதனால் அதிலிருந்து மோசமான வாசனை வரும் மற்றும் அாிசியின் நிறம் மாறிவிடும். இதை வைத்தே அரிசி கெட்டிருக்கிறது என்று கண்டுபிடித்துவிடலாம்.
அரிசி போட்டு வைத்திருக்கும் பாத்திரங்களில் வண்டுகள் அல்லது பூச்சிகள் ஊா்வது தொிந்தால், அதில் இருக்கும் அாிசியை வெளியில் எறிந்து விடுவது நல்லது.
ஏனெனில் கெட்டுப் போன அாிசியை சமைத்தால் அது விஷமாக மாற வாய்ப்பு உண்டு. மேலும் அாிசியை பத்திரப்படுத்தி வைப்பதற்கு முன்பாக அதன் பாத்திரங்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.