தாயை எதிர்பார்த்து காத்திருந்த குழந்தை: குறுக்கே வந்து மடியில் படுத்த தந்தை! உச்சக்கட்ட கோபத்தை பாருங்க
குழந்தை ஒன்று தனது மடியில் அம்மா படுத்ததும் முத்தங்கள் கொடுத்து சந்தோஷத்தினை வெளிப்படுத்திய நிலையில், தந்தை தனது மடியில் படுத்ததும் மிதித்து தள்ளி தனது கோபத்தினை வெளிப்படுத்தும் காட்சி வைரலாகி வருகின்றது.
குழந்தைகள் இருக்கும் வீட்டில் குதூகலத்திற்கு பஞ்சமே இல்லை. தானும் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமின்றி தன்னைச் சுற்றியுள்ளோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்கு MOM vs DAD என்ற தலைப்பில் ஆரம்பிக்கும் இக்காட்சியில், குழந்தையின் மடியில் அதன் தாய் தலையை வைக்கின்றார். அதற்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் முத்தத்தினைக் கொடுத்து தனது அன்பினை வெளிக்காட்டியுள்ளது.
மறுபடியும் தனது தாயை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில் தந்தை தனது மடியில் படுத்துள்ளார். இதனை விரும்பாத குழந்தை காலால் மிதித்து தன்னுடைய வெறுப்பினைக் காட்டியுள்ளது.