குழந்தை பிறந்த பிறகு நஞ்சுக்கொடியை சமைத்து உண்ட தாய்! வெளிநாட்டில் நடந்த பயங்கரம்
சமீபத்தில் தாயான கெத்ரினா ஹில் என்ற பெண் தனக்கு குழந்தை பிறந்த பிறகு தனது குழந்தையின் நஞ்சுக்கொடியை மருத்துவமனையில் கேட்டு வாங்கி கொண்டார். பிறகு அதைக்கொண்டு புரிட்டோ என்னும் உணவை அவர் சமைத்தார். கேம்பிரிட்ஜ்ஜை சேர்ந்த இவர் இருவருக்கு தாயாக உள்ளார். அவர் தனது இரு குழந்தைகளின் நஞ்சுக்கொடியையும் உட்கொண்டதாக கூறியுள்ளார்.
Ketrina Hill, Mom of two children reveals she cooked up a burrito with her placenta after giving birth. pic.twitter.com/Dmd8LzPZ4g
— Balajiviswanath Natarajan ?? (@balajivizwanath) February 2, 2021
அதாவது இதற்கு முன்பே அவர் முதல் குழந்தையின் நஞ்சுக்கொடியை உட்கொண்டுள்ளார். மெயின் ஆன்லைன் என்ற பத்திரிக்கையின் அறிக்கையின்ப்படி ஹில் தனது முதல் குழந்தை ஃபின்லி 2016 ஆம் ஆண்டு பிறந்த போது அவரது நஞ்சுக்கொடியை காப்சூல் என்னும் மாத்திரை வடிவில் உண்ண விரும்பினாராம்.
இருப்பினும் அந்த சமயத்தில் அவருக்கு நிறைய செலவுகள் இருந்ததால் இந்த ஐடியாவை பொறுமையாக செய்ய இருந்தாராம். தற்சமயம் இரண்டாவது குழந்தை பிறந்த தருணத்தில் இப்போது அந்த குழந்தையின் நஞ்சுக்கொடியையும் ஒரு உணவாக சமைத்து உண்டுள்ளார். இவரது இரண்டாவது குழந்தை லூனா 29 ஏப்ரல் 2020 இல் பிறந்ததை அடுத்து இதை அவர் செய்துள்ளார்.
தனது முதல் முயற்சியில் இவர் நஞ்சுக்கொடியுடன் மிளகாயை சேர்த்து உண்டாராம். கடந்த ஆண்டு இரண்டாவது முறை அதில் சீஸ், புளிப்பு க்ரீம் ஆகியவற்றை சேர்த்து புரிட்டோ என்னும் உணவாக மாற்றி உண்டுள்ளார். உணவாக சமைக்கும் வரை இந்த நஞ்சுக்கொடியை உறை நிலையில் பாதுக்காத்து வைத்திருந்தாராம். இதை பற்றி கூறும்போது “நஞ்சுக்கொடி இணைப்பு குறித்து நிறைய ஆராய்ச்சிகளை நான் படித்தேன். அதனால் அவற்றை உண்ண நினைத்தேன். ஆனால் அவற்றை எங்கும் வாங்க முடியாது.
ஆனால் அதை சாப்பிட்டவர்கள் குறித்து நான் ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தேன். அப்போதுதான் சில விஷயங்கள் புரிந்தன. இது பிரசவத்திற்கு முன்பு ஏற்படும் மன சோர்வை குறைக்கிறது. மற்றும் பிரசவத்திற்கு பிறகு பால் உற்பத்திக்கு உதவுகிறது இன்னும் பல நன்மைகளை அதில் கண்டறிந்தேன். எனவே நான் அவற்றை உண்டேன். இதனால் எனது இரு குழந்தைகளுக்கும் சரியான அளவு தாய்ப்பால் கொடுக்க முடிந்தது” என்று அவர் கூறுகிறார் மேலும் “நான் நஞ்சுக்கொடியை சாப்பிட்டதால் மிகவும் நன்றாக உணர்ந்தேன்.
எனவே எனது இரண்டாவது குழந்தையின் பிறப்பின் போதும் அதை உண்ண முடிவு செய்தேன். அப்போதும் நான் நன்றாகவே உணர்ந்தேன்” என்று அவர் கூறினார்
இதனால் வெளிநாடுகளில் நஞ்சுக்கொடியை உண்பது என்பது தாய்மார்களிடையே பிரபலமடைந்து வருகிறது. இருப்பினும் நஞ்சுக்கொடியை உண்பதால் நன்மைகளை விட அதிக தீமைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர்,