சிம்பு உடன் நடந்த சண்டை உண்மையா? 16 வருடம் கழித்து ரகசியத்தை கூறிய பப்லு
16 வருடங்களுக்கு பிறகு சிம்புவோடு நடந்த சண்டை குறித்து பப்லு ப்ரீத்திவிராஜ் தற்போது பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
16 வருடங்களுக்கு முன் நடந்த சண்டை
90s எல்லோருக்கும் பிரபலமான ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1.
இந்த ஜோடி நம்பர் 1 சீசனில் உமா ரியாஸ் மற்றும் பப்லு பிரித்திவிராஜ் இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடி இருந்தனர். அந்த நிகழ்ச்சியின் நடுவராக சிம்பு, சங்கீதா, சுந்தரம் மாஸ்டர் ஆகியோர் இருந்தனர்.
அப்போது ஒரு எபிசோடில் பப்லு டான்ஸ் சரியாக ஆடவில்லை என்று சிம்பு கூற அங்கு சண்டை பெரிய அளவில் நடந்தது.
அப்போது என்னை எப்படி சிம்பு அப்படி சொல்லலாம் என்று பப்லு எகிற அங்கிருந்த எல்லோரும் சமாதானம் செய்து பார்த்தனர். ஆனாலும் சிம்பு மற்றும் பப்லு இடையே பெரிய அளவில் சண்டை ஏற்பட்டது.
அப்போது ஒரு கட்டத்தில் சிம்பு அழவே செய்திருந்தார், அப்போது எனக்கு நடிக்க தெரியாது என்று அந்த நேரத்தில் சிம்பு பேசிய டயலாக் இப்ப வரைக்கும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
பப்லு கூறிய சீகிரெட்
இந்நிலையில், இது குறித்து 16 வருடம் கழித்து உமா ரியாஸூம் பிரித்விராஜும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்போது சிலர் அவரிடம் கேள்வி கேட்டு இருக்கின்றனர்.
அப்போது பப்லு பிரதிவிராஜ் ''இங்கு இருக்கும் எல்லோருக்குமே ஜோடி சீசன் 1-ல் நடந்தது குறித்த சந்தேகம் இருக்கிறது. அதெல்லாம் பேசி வச்சிட்டு தான் அப்படி பண்ணியிருப்பாங்கன்னு நினைத்தார்கள். ஆனால் அது தான் உண்மை. பேசி வச்சு தான்''... என்று பப்லு கூறியிருக்கிறார்.
அதோடு இந்த விஷயத்தை பப்லு தெளிவாக பேசாமல் ''இது பற்றி நீங்க எல்லோரும் சஸ்பென்ஸ் ஓட இருங்க'' என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |