அடுத்த 20 வருடங்களில் மாறப்போகும் இஸ்லாமிய ஆட்சி- பாபா வாங்கா கணிப்பில் வெளியான தகவல்
உலகில் எதிர்காலத்தைக் கணிக்கும் பல தீர்க்கதரசிகள் உள்ளனர். அதில் பாபா வாங்காவும் ஒருவராக இருக்கிறார்.
பாபா வாங்காவின் கணிப்புக்களை தெரிந்து கொள்ள இணையவாசிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏனெனின் அவர்களின் கணிப்பில் ஒரு சில விடயங்கள் உண்மையாகவே நடந்தது.
உதாரணமாக, ரஷ்யா-உக்ரைன் போர் முதல் செர்னோபில் பேரழிவு வரை இவரது கணிப்புகள் உண்மையாகியுள்ளன.
பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கத்தரசியான பாபா வாங்காவின் உண்மையான பெயர் “வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவா” என்பதாகும். இவருக்கு 12 வயதாக இருக்கும் போது ஒரு விபத்தில் அவரின் பார்வை பறிபோனது. ஆனால் அந்த சம்பவத்திற்கு பின் ஒரு அற்புதமான சக்தியான எதிர்காலத்தை கணிக்கும் திறன் கிடைத்தது.
அந்த வகையில், அடுத்த 20 வருடங்களில் குறிப்பிட்ட சில நாடுகள் இஸ்லாமிய ஆட்சிக்கு மாறப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இஸ்லாமிய ஆட்சி வருமா?
1. பாபா வாங்காவின் கணிப்பின்படி, ஐரோப்பாவில் ஒரு பெரிய மோதல் ஏற்படவுள்ளது. எதிர்வரும் 2043 ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பா இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளார்.
2. எதிர்வரும் 2076 ஆம் ஆண்டிற்குள் உலகளவில் கம்யூனிச ஆட்சி மீண்டும் வரும் என்றும், ஒரு இயற்கை நிகழ்வின் காரணமாக உலகம் இறுதியாக 5079 இல் முடிவுக்கு வரும் என்றும் கணித்துள்ளார்.
3. எதிர்வரும் 2028 ஆம் ஆண்டில் உலக பசியை ஒழிக்கும் புதிய சக்தி ஆதாரம் உருவாக்கப்படும். அப்போது வாழும் மனிதர்கள் வீனஸ் கிரகத்தை அடைவார்கள் என கணிப்பில் உள்ளது.
4. பிறக்கவிருக்கும் 2033 ஆம் ஆண்டில் கடல் மட்டம் உயர்வது போன்ற காலநிலை மாற்றம் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும். பேராபத்துக்கள் குறித்து டைம்ஸ் என்டர்டெயின்மென்ட் அறிக்கை கூறப்பட்டுள்ளது.
5. 2043 ஆம் ஆண்டில் ஐரோப்பா ஒரு செழிப்பான பொருளாதாரத்தை அனுபவிப்பதோடு, இஸ்லாமிய ஆட்சி நடத்தும் நாடாகவும் மாறும் என பாபா வாங்கா கணித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |