தங்கம் விலை பற்றிய பாபா வங்கா கணிப்பு - இதை கவனித்தீர்களா?
தற்போது நாடுகளுக்கிடையேயான போர் காரணமாக தங்கம் வெள்ளி விலை வரலாறு காணாத சரிவை எட்டி உள்ளது. இந்த நிலையில் 2026இற்கான தங்கம் விலை பற்றி பாபா வங்கா கணித்துள்ளார்.

பாபா வங்கா
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வாங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.
பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் பின் அவரால் கணிக்கபட்ட பல விடயங்கள் அதுவும் 100 வருடங்களுக்கு முன்பு கணித்த விடயங்கள் தற்போது இந்த நூற்றாண்டில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் பாபா வாங்கா 2026ம் ஆண்டு தொடங்கிவிட்டால் இதுபோன்ற சில விடயங்கள் நடக்கும் என கூறி இருந்தார். அந்த விடயங்கள் ஒவ்வொன்றாக நடைபெற்று வருகின்றது.
இன்னும் நடக்கும் எனவும் குறிப்பிட்டு உள்ளார். அதன்படி தற்போது தங்கத்தின் விலையில் அதிகமாக சரிவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பாபா வங்காவின் கணிப்பும் உள்ளது.

தங்கம் பற்றிய பாபh வங்கா கணிப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானும் அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்த போர் காரணத்தால் தங்கம் மற்றம் வெள்ளி விலையில் அதிகரிப்ப ஏற்படும் என நினைத்த நிலையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
இதனால் மக்கள் தற்போது தங்கம் வாங்கலாமா அல்லது இன்னும் விலை குறையும் வரை காத்திருக்கலாமா என்று குழம்பி உள்ளனர். இப்படி இருக்க தங்கம் விலை தொடர்பாக பாப வங்காவின் கணிப்பு ஒன்று தற்போது இணையத்தில் உலா வருகின்றது.

அதன்படி பாபா வங்கா 2026 ஆம் ஆண்டில் ஒரு பெரிய உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்படும் எச்சரித்திருந்தார்.
இந்த கணிப்பின்படி பார்த்தால் வங்கிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கபட்டது. வங்கிகள் மற்றும் காகித நாணயங்கள் மீதான நம்பிக்கை இழக்கப்படும்போது, தங்கத்தின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
சந்தை ஊகங்களின்படி, தங்கத்தின் விலை மேலும் 25% முதல் 40% வரை உயரக்கூடும். இந்தக் கணிப்பு உண்மையானால், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.9 லட்சம் முதல் ரூ.2.1 லட்சம் வரை உயரலாம். என்று கூறப்படுகின்றது.

நிபுணர்களின் கூற்றுப்படி தங்கத்தின் விலை வதந்திகளை மட்டும் சார்ந்தது அல்ல இது வட்டி விகிதங்கள், பணவீக்கம் மற்றும் அரசியல் போன்றவற்றை சார்ந்துள்ளது எனப்படுகின்றது.
மேலும் நிதி ஆய்வாளர்களின் கூற்றுப்படி, போர்ச் சூழல் தணிந்தவுடன் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
மெலும் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என்று கூறி உள்ளனர். எனவே பாப வங்காவின் கணிப்பு மூலம் சொல்லப்படும் தங்கம் பற்றி விலை உறுதியானவை இல்லை என கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |