பாபா வங்காவின் கணிப்பு: 2026 செப்டம்பரில் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்!
Baba Vanga Prediction For September 2026: எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் என்று வரும்போது, உலகப் புகழ்பெற்ற பாபா வங்கா முக்கியமானவராகக் கருதப்படுகிறார். உலக வரலாற்றில் நிகழ்ந்த பல முக்கிய சம்பவங்களை அவர் முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், அவரது கணிப்புகள் இன்றும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. அந்தவகையில், 2026-ஆம் ஆண்டின் கடைசி மாதங்கள் சில ராசிக்காரர்களுக்கு திருப்புமுனையாக அமையும் என்ற கணிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக, செப்டம்பர் 2026-ல் கிரகங்களின் அமைப்பு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் எனக் கூறப்படுகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷபம்

பாபா வங்காவின் வைரலாகும் கணிப்பின்படி, செப்டம்பர் 2026 ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கும். முதலீடுகள் மற்றும் சொத்து பரிவர்த்தனைகளில் லாபம் கிடைக்கலாம்.
கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவதுடன், வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும். இதனால் வாழ்க்கையில் திருப்தியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
சிம்மம்

பாபா வங்காவின் கணிப்பின்படி, செப்டம்பர் 2026 சிம்ம ராசியினருக்கு பணமும் புகழும் தேடிவரும் காலமாக அமையும். அவர்களின் தலைமைத்துவப் பண்புகள் முன்னேற்றத்திற்கு உதவும்.
பதவி உயர்வு, புதிய தொழில் முயற்சி அல்லது பெரிய ப்ராஜெக்ட் மூலம் வருமானம் அதிகரிக்கக்கும் சோம்பேறித்தனத்தைத் தவிர்த்து சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தால், இந்த காலகட்டத்தில் நிதி நிலையில் உயர்வு உறுதி.
விருச்சிகம்

பாபா வங்காவின் வைரலாகும் கணிப்பின்படி, செப்டம்பர் 2026-ல் விருச்சிக ராசியினர் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும்.
முதலீடுகளில் கணிசமான லாபம் கிடைத்து, நிதி நிலை வலுப்பெறலாம். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பும், எதிர்காலத்திற்கு உதவும் முக்கியமான நபரின் நட்பும் கிடைக்கலாம்.
குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதுடன், புதிய வியாபாரம் தொடங்க விரும்புவோருக்கும் இந்த மாதம் சாதகமாக இருக்கும்.
கும்பம்

பாபா வங்காவின் கணிப்புப்படி, செப்டம்பர் 2026 கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான மாதமாக இருக்கலாம். தொழில் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும்.
வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும், பணியில் இருப்பவர்களுக்கு மரியாதை மற்றும் புதிய பொறுப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
அவர்களின் தலைமைத்துவம் மற்றும் நிர்வாகத் திறன்கள் வலுப்பெற்று, வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |