பாபா வங்காவின் கணிப்பு - உலக நாடுகள் போரால் இந்தியாவிற்கு வரும் தாக்கம் என்ன?
தற்போது உலக நாடுகளுக்கிடையில் நடக்கும் அசாதாரண சூழ்நிலையில் இந்தியாவிற்கு என்ன ஆபத்து வரும் என்பதை பாபா வங்கா கணிப்பு வைத்து பார்க்கலாம்.

பாபா வங்கா
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வாங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.
பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் பின் அவரால் கணிக்கபட்ட பல விடயங்கள் அதுவும் 100 வருடங்களுக்கு முன்பு கணித்த விடயங்கள் தற்போது இந்த நூற்றாண்டில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் பாபா வாங்கா 2026ம் ஆண்டு தொடங்கிவிட்டால் இதுபோன்ற சில விடயங்கள் நடக்கும் என கூறி இருந்தார். அதன்படி சில விடயங்கள் நடந்துகொண்டிருக்கின்றது. இதன்படி இந்த போரினால் இந்தியாவிற்கு என்ன நிலை வரும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவின் நிலை என்ன
பாபா வங்காவின் கணிப்புகளின்படி, 2026-ஆம் ஆண்டில் உலகம் ஒரு பெரும் புவிசார் அரசியல் மோதலைச் சந்திக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அதே போல் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் நடைபெற்று வருகின்றது.
இதனால் பாபா வங்காவின் கணிப்பு பேசுபொருளானது. ஆனால் இந்த கணிப்பிற்கு எழுத்துமூலமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதவாக மத்திய கிழக்கு நாடுகள், உலகளாவிய எரிசக்தி உற்பத்தியின் முதன்மையான மையமாக இருக்கிறது.

தற்போது இந்த நாடுகளுக்கிடையேயான போர் பதற்றதால் எண்ணெய் வளம் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் கடல் போக்கவரத்துக்களும் பாதிக்கபட்டுள்ளது.
இந்த இடையூறுகள் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை உண்டாக்கும். இதன்படி சமீபத்திய அறிக்கைகளின்படி மத்திய கிழக்கின் போர் பிரச்சனையால் தற்போது இந்தியாவில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இந்திய நாணயம் அமெரிக்க டாலருக்கு மிக குறைவான மதிப்பில் விலை சரிந்துள்ளது. இந்தியா கச்சா எண்ணெய் தொடர்பில் சர்வதேச சந்தைகளையே சார்ந்துள்ளது.

இந்த நிலையில் எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் மாற்றங்கள் எரிபொருள் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும்.
இது பணவீக்க அழுத்தங்களை உருவாக்கி, இந்திய ரூபாயின் மதிப்பைப் பாதிக்கும். தற்போது இந்தியாவில் கேஸ் சிலிண்டருக்கான தட்டுப்பாடு போரின் காரணமாக தான் என்பது குறிப்பிடத்தக்கது.