ஒருவழியாக கேன்டீன் ஓடரை வாங்கிய பாக்கியா.. கடுப்பில் மாமியார்- இனி நடக்க என்ன?
ஒரு வழியாக கேன்டீன் ஓடரை எழிலின் உதவியுடன் பாக்கியா வாங்கியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் சுஜித்திரா நடித்து வருகிறார்.
கடந்த 5 வருடக்காலமாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் சமிபக்காலமாக பல்வேறுப்பட்ட டுவிஸ்ட்கள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களாக பாக்கியாவிற்கு கேன்டீன் ஓடர் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தார்.
இது போன்ற நேரங்களில் பாக்கியாவிற்கு உதவியாக இருக்க வேண்டிய மாமியார் மகனுடன் இணைந்து கொண்டு பாக்கியாவிற்கு எதிராக சில வேலைகளை பார்த்து வந்தார்.
கடுப்பில் மாமியார்
இந்த நிலையில் பாக்கியா வீட்டிற்குள் இருக்கும் கோபி - ராதிகாவுடன் இங்கே செட்டிலாகி விட்டார்.
ராதிகா அழைத்தால் கூட போகாமல் மருமகளாக ஏற்றுக் கொண்ட பின்னர் செல்லாம் என பாக்கியா வீட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் பாக்கியாவிற்கு கேன்டீன் ஓடர் கிடைத்துள்ளது. இது குறித்த வீட்டிலுள்ள அனைவரும் குஷியாக இருக்கும் பொழுது ஈஸ்வரியும் கோபியும் பொறாமையில் பொங்கிக் கொண்டிருக்கிறார்.
மேலும் ராதிகா தற்போது நியாயம் பக்கம் பேசுவதாக கோபியிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |