Baakiyalakshmi: இறக்கும் தருவாயில் ஈஸ்வரியை கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கும் தாத்தா! நெகிழ்ச்சி காட்சி
பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பாராத விதமாக தாத்தாவின் இறப்பு நிகழ உள்ளது ரசிகர்களை சற்று வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஆயிரம் எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. நடுத்தர குடும்ப பெண் புகுந்த வீட்டில் சந்திக்கும் பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் பாக்கியா இதனை சமாளித்து குடும்பத்தினை கொண்டு செல்லும் நிலையில், தற்போது கதையில் எதிர்பாராத திருப்பம் நடைபெற உள்ளது.
ஆம் சமீபத்தில் 80வது பிறந்தநாளைக் கொண்டாடிய தாத்தா இறந்துவிடுவது போன்று கதையை கொண்டு செல்ல உள்ளனர்.
மிகவும் உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்ட இந்த கதையில், தாத்தாவின் இறுதி தருணங்களும் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.
அதாவது பாக்கியாவிடம் பேசுவது, பாட்டியை படுக்கையில் கடைசி நிமிடத்தில் பாசமாக நடந்து கொள்வது என அனைத்தும் மனம் வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |