Baakiyalakshmi: தாத்தா தூங்குவதாக நினைத்து மகிழ்ச்சியில் குடும்பம்! இடியை இறக்கிய மருத்துவர்
பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பாராத விதமாக தாத்தாவின் இறப்பு நிகழ்ந்துள்ள நிலையில், மருத்துவர் வந்து உண்மையை உடைத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஆயிரம் எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. நடுத்தர குடும்ப பெண் புகுந்த வீட்டில் சந்திக்கும் பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் பாக்கியா இதனை சமாளித்து குடும்பத்தினை கொண்டு செல்லும் நிலையில், தற்போது கதையில் எதிர்பாராத திருப்பம் நடைபெற்றுள்ளது.
ஆம் யாரும் எதிர்பார்க்காத நிலையில், குறித்த சீரியலில் தாத்தா உயிரிழந்துள்ளார். தாத்தா இரவு எல்லாம் தூங்காமல் இருந்ததால் அவர் காலையில் தூங்குவதாக நினைத்து அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
தாத்தா அசைவு இல்லாமல் இருப்பதைப் பார்த்த குடும்பத்தினர் உடனே மருத்துவரை அழைக்கின்றனர். அதற்கு பாக்கியாவின் தோழியாக நடிக்கும் கம்பம் மீனா அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் அவர் சொல்வதை கேட்டகாமல் வீட்டில் உள்ளவர்கள் அவரை சத்தம் போட்டுள்ள நிலையில் இறுதியில் மருத்துவர் தாத்தா இறந்துவிட்டதாக அறிவித்தார்.
அடுத்த குறித்த சீரியலில் என்ன நடக்க போகின்றது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |