சீரியலில் கடைசி நிமிடங்கள்.. ஷுட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து காணொளி வெளியிட்ட பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் கடைசி நிமிட காட்சிகளை நடிகை சுசித்திரா காணொளியாக வெளியிட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அதில், நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி என்ற லீட் ரோலில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
கோபி, பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு அவரின் முன்னாள் காதலியான ராதிகாவை மறுமணம் செய்து கொண்டார். அப்போது ராதிகாவிற்கு மயூ என்ற பெண் குழந்தையும் இருந்தது.
கோபி, பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு அவரின் முன்னாள் காதலியான ராதிகாவை மறுமணம் செய்து கொண்டார். அப்போது ராதிகாவிற்கு மயூ என்ற பெண் குழந்தையும் இருந்தது. ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. ராதிகா - கோபியுடன் வாழ முடியாது என விவாகரத்து கொடுத்து விட்டார்.
தற்போது பாக்கியா வீட்டில் ஈஸ்வரி தயவில் கோபி இருந்து வருகிறார். அவர் இல்லாத காலத்தில் கோபி எங்கு செல்வார் என பயந்த ஈஸ்வரி, கோபி- பாக்கியா இருவரையும் எப்படியாவது சேர்த்து வைத்து விடலாம் என திட்டம் போடுகிறார்.
மறுமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாக்கியா
இந்த நிலையில், பாக்கியாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. அந்த சமயத்தை பயன்படுத்திய ஈஸ்வரி, அனைவரும் பார்க்க மைக்கில், பாக்கியாவும் கோபியும் மீண்டும் இணைந்து கணவன்- மனைவியாக இருப்பார்கள் எனக் கூறி விடுகிறார்.
ஈஸ்வரி இப்படியொரு வேலை செய்வார் என எதிர்பார்க்காத பாக்கியா, அதே நிகழ்வில், “முடிந்தது முடிந்தாகவே இருக்கட்டும். எனக்கு இதில் துளியளவும் விருப்பம் இல்லை..”எனக் கூறி விடுகிறார். பாக்கியாவின் பதில் கேட்டு ஈஸ்வரி கோபத்தில் அங்கிருந்து வெளியேறி விட்டார்.
ஷீட்டிங்கில் வெளியான காணொளி
இது ஒரு புறம் இருக்கையில், பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் சில எபிசோட்களில் நிறைவுக்கு வரவிருக்கிறது. இதனால் அடுத்து என்னென்ன விடயங்கள் நடக்கப்போகிறது என்பதனை காண ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுசித்திரா, படப்பிடிப்புத்தளத்தில் பதிவு செய்த காணொளியொன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளியை பார்த்த ரசிகர்கள், “பாக்கியலட்சுமி சீரியல் முடிகிறதா?” என வறுத்தமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |