பில்லி சூனியம் அளவிற்கு இறங்கிய கோபி.. ஒத்து ஊதும் ஈஸ்வரி- இனி நடக்க போவது என்ன?
பில்லி சூனியம் அளவிற்கு இறங்கிய கோபியின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஈஸ்வரி பேசுகிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இன்றைய தினம் எபிசோட்டில் பழனிசாமியை சேர்த்து வைத்து பாக்கியாவை கோபி பேசுகிறார்.
இதனால் கடுப்பான மூன்று பிள்ளைகளும் பாக்கியாவிற்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
பாக்கியா மீது எந்த விதமான தவறும் இல்லாத காரணத்தினால் பாக்கியா பக்கம் தான் ராதிகாவும் பேசுகிறார்.
சூனியம் அளவிற்கு யோசிக்கும் கோபி
இந்த நிலையில் பாக்கியா - ராதிகாவிற்கு ஏதாவது சூனியம் வைத்து விட்டார் போல என கோபி அவரின் அம்மாவிடம் இரவு புலம்பிக் கொண்டிருக்கிறார்.
கோபி செய்த விடயங்களை மறந்து விட்டு பாக்கியாவிற்கு எதிராக தொடர்ந்து ஈஸ்வரியும் பேசிக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய வாழ்க்கையை பார்க்காமல் எல்லாவிதமான கஷ்டங்களை பொறுத்து கொண்டு குடும்பத்திற்காக வாழும் பாக்கியாவிற்கு இது ஒரு அடியாக விழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து ராதிகாவும் “நீங்கள் பழனிச்சாமியை திருமணம் செய்து கொள்ளலாமே...” என கூற பாக்கியாவிற்கு கோபம் வருகிறது.. “ திருமணம் செய்த நீங்கள் சந்தோசமாகவா இருக்கீங்க?..” என பதில் கொடுத்துள்ளார்.