புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்... தற்போதைய நிலை என்ன?
பிரபல சீரியல் நடிகரான நேத்ரன் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை அவரது மகள் கூறியுள்ளார்.
நடிகர் நேத்ரன்
சின்னத்திரை நடிகரான நேத்ரன் பல சீரியல்களில் நடித்து வரும் நிலையில், இவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவரது மனைவி நடிகை தீபா ஆவார். இந்த தம்பதிகளுக்கு அபிநயா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு இவரது மகள் அபிநயா காணொளி ஒன்றினை வெளியிட்டு தனது தந்தைக்கு புற்றுநோய் என்றும் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கூறியிருந்தார்.
பலரும் இவரது காணொளியினை அவதானித்து ஆறுதல் கூறிய சிலரோ அசட்டையாகவும், மனம் கஷ்டப்படும் அளவில் பேசிவந்தனர்.
தற்போதைய நிலை என்ன?
தற்போது அபிநயா பேசுகையில், தனது தந்தை மெல்ல மெல்ல மீண்டு வருவதாகவும், விரைவில் பழைய நிலைக்கு வந்துவிடுவார் என்று கூறியுள்ளார்.
எனக்கு முக்கிய துணையாக இருப்பது தனது தந்தைதான்.... எந்த பிரச்சனையாக இருந்தாலும் எங்களுக்கு தைரியம் கொடுப்பார்... தனது தந்தை இந்த பிரச்சனையை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், எல்லாம் சரியாகிவிடும் என்று தைரியம் கொடுத்தார்.
சீக்கிரமாக அனைவரிடமும் லைவில் பேசுவார்... ஆனால் அப்பா குறித்து நான் முதல் காணொளி வெளியிட்ட போது, பலரும் மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தது மனதிற்கு கவலையாக இருந்தது...
ஆரம்பத்தில் நான் ரொம்ப ஒல்லியாக இருப்பேன் என்று அதற்காக பாடி ஷேமிங் பண்ணி இருக்கிறாங்க என்றும் பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |