பாக்யாவுக்கு செக் வைத்த கோபி: உதவி செய்த அந்த இரு நபர்கள்
விஜய் டிவியில் தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இத்தொடருக்கு இல்லத்தரசிகள் அமோக ஆதரவு பெருகி வருகிறது.
இத்தொடரில் பாக்கியலட்சுமி கோபிக்கு விட்ட சவால் முடிவுக்கு வருவதற்கு இன்னும் 2 நாட்கள் இருக்கிறது. கோபி, ராதிகாவுடன் சேர்ந்து மனைவி என்று கூட பாராமல் பாக்கியாவை நக்கடிக்கிறார்.
உன்னால சவால் விட்ட பணத்தை கொடுக்க முடியாது என்று அவளை ஏவலமாக பேசுகிறார்கள். ஆனால், பாக்கிய இவர்களிடம் விடுத்த சவாலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று போராடுகிறாள்.
ஆனால் எப்படி பணத்தை திரட்டுவது என்று மனமுடைந்து அழுகிறாள். கல்யாண ஆர்டர் மூலம் கிடைத்த 18 லட்சத்தை திரட்டிவிடுகிறாள். ஆனால், இன்னும் 10 லட்சத்தை எப்படி திரட்டுவது என்று கலங்கி நிற்கிறாள்.
உதவி செய்த இரண்டு நபர்கள்
இவளின் கலக்கத்தைப் பார்த்த ஜெனி, செழியனிடம் நாம்ம எப்படியாவது பாக்கியா ஆண்டிக்கு உதவி செய்யணும் என்று பேசிக்கொள்கிறார்கள்.
அந்த நேரத்தில் 2 நாட்களாக எழிலை வீட்டில் காணவில்லை. எழில் எங்கே என்று பாக்கியா விசாரிக்கையில், எழில் பாக்கியாவிடம் வருகிறார்.
அம்மா பழனிச்சாமி சார் விளம்பர ஷூட்டிங் கொடுத்திருக்காரு. அதுல நான் பிசியாகிட்டேன். அதான் 2 நாட்கள் வீட்டிற்கு வரவில்லை என்று சொல்கிறார்.
ஏன் இவ்வளவு கஷ்டப்படுற என்று பாக்கியா கேட்க, பையில் இருந்த 5 லட்சம் பணத்தை எடுத்து கொடுக்கிறார் எழில்.
இதைப் பார்த்த பாக்கியா திகைக்கிறாள். அம்மா 2 நாள் மட்டும்தான் இருக்கு. மீதி பணமும் கைக்கு வந்துடும். அந்த ஆளுக்கிட்ட இந்த பணத்தை கொடுத்து வீட்டை வாங்கிடலாம் என்று சொல்கிறான். இதைக் கேட்டு பாக்கியா இன்ப அதிர்ச்சி அடைந்து கண்கலங்குகிறாள்.
இல்லடா... இத நீயே வச்சுக்கோ என்று சொல்கிறாள். ஆனால், எழில்.. அம்மா நான் பையன்... உன் கஷ்டத்தைப் பார்த்து நான் ஒதுங்கி நிக்கணும்மா என்று கேட்டு பணத்தை பாக்கியாவிடம் கொடுக்கிறான். இதைப் பார்த்த செழியனும் தன் பங்குங்கு 5 லட்சம் பணத்தையும் கொடுக்கிறான்.
மாஸ் காட்டப்போகும் பாக்கியா
பணத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு பாக்கியா கோபியிடம் செல்ல, நடந்த விஷயம் எதுவும் தெரியாமல் கோபியும், ராதிகாவும் வசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பணத்தை ரெடி பண்ணிட்டீங்களா மேடம். இன்னும் ஒரு நாள் தான் இருக்கு. இவளால ஒரு 18 ஆயிரம் கூட திரட்ட முடியாது நக்கலடித்து பேசுகிறாள். நீங்க பேசி முடிங்க. அதுக்கப்புறம் நான் பேசுறேன் என்று கெத்தாக நின்றுக்கொண்டிருக்கிறாள் பாக்கியா.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |