பாட்டி வந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போடும் இனியா- இனி கோபி என்ன செய்ய போகிறார்?
எப்படியும் பாட்டியை வெளியில் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் பாக்கியா போராடிக் கொண்டிருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், கமலா ஈஸ்வரி தன்னுடைய பேரக்குழந்தையை கொன்று விட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் ஈஸ்வரியை கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஈஸ்வரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் பாக்கியா குடும்பத்துடன் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
ஈஸ்வரியை குற்றவாளியாக்குவதற்காக கமலாவும், ராதிகாவும் மாறி மாறி வாக்குமூலம் கொடுக்கிறார்கள். பாக்கியா குடும்பத்திலிருந்து முதல் ஆளாக பாக்கியாவை கூண்டில் ஏற்றுகிறார்கள். அப்போது பாக்கியா, “ கணவர் இல்லாவிட்டாலும் என்னுடைய குடும்பம் என்னை விட்டு கொடுக்கவில்லை.
கொண்டாட்டத்தில் இனியா
அவர்களின் அனுமதியுடன் தான் கோபியின் அம்மா - அப்பாவுடன் இருக்கிறேன்.” என்பது போல் அவர் பக்கம் உள்ள கருத்துக்களை முன் வைக்கிறார்.
இப்படியொரு நாள் ஈஸ்வரி வெளியில் கொண்டு வர முடியாமல் போகின்றது. மயூவை பார்ப்பதற்காக பாக்கியா பாடசாலைக்கு செல்கிறார். அப்போது உண்மையான விடயம் வெளியே வருகிறது.
இதனை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இனியா என்கிற நேஹா சந்தோசமாக ஆடும் காணொளியொன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காணொளியை பார்த்த ரசிகர்கள், “ பாட்டி வெளியில் வரும் சந்தோசத்தில் இப்படி ஆடுகிறீர்களா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |