தலைமுழுகிய ஈஸ்வரி- தாங்க முடியாமல் கதறி அழும் கோபி- உடனே ராதிகா சொன்ன வார்த்தை
கோபி செய்தவற்றை தாங்கிக் கொள்ள முடியாமல் ஈஸ்வரி தலைமுழுகியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், ஈஸ்வரி- ராதிகா பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்ததால் பாக்கியா வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்.
வேதனையில் பேசிய கோபி
இந்த நிலையில் கோபி, தன்னுடைய அம்மா ஈஸ்வரிடம் மனம் விட்டு பேசுவதற்காக வருகிறார்.
ஆனால், கோபத்தில் ஈஸ்வரி, “இனி எனக்கு மகனே இல்லை. எனக்கு இருப்பது ஒரே மகள் பாக்யா தான். நான் இறந்த பிறகு கூட என்னுடைய சாவிற்கு நீ வரக்கூடாது..” என கூறியதுடன் தலையில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொள்கிறார்.
ஈஸ்வரி இப்படி செய்ததால் வீட்டிலுள்ள அனைவரும் அதிர்ச்சி ஆகிறார்கள். தன்னுடைய அம்மா இப்படி கூறியதும் கோபி எதுவும் பேச முடியாமல் மனம் நொந்து வெளியே போகிறார்.
உடனே ராதிகா சொன்ன வார்த்தை
பின்னர் ராதிகா வீட்டிற்கு வருகிறார். ராதிகாவை அடிப்பார், திட்டுவார் என எதிர்பார்த்த வேளையில், வந்து அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார்.
உடனே ராதிகா, “ நான் தெரியாமல் செய்து விட்டேன்.” என மன்னிப்பு கூறுகிறார். கோபி மெதுவாக ராதிகாவை பார்த்து, “ சாரி என்று கேட்டவுடன் ஒரே சாரியில் எல்லாம் முடிந்ததா? ”என்று வேதனையில் பேசுகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |