அமிர்தாவை அசிங்கப்படுத்திய ஈஸ்வரி.. குஷியில் குடும்பத்தினர்- மன்னிப்பார்களா?
அமிர்தா இன்னும் கர்ப்பமாகாமல் இருப்பதால் ஈஸ்வரி கடுப்பாகி திட்டியுள்ளர்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அதே சமயம் இயக்குனர், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரச்சனையை வைத்து ரசிகர்கள் மத்தியில் சீரியலின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் குடும்ப பெண்ணாக இருந்து பாக்கியா எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் மற்றும் குடும்பத்திற்காக என்னென்ன விடயங்களை தியாகம் செய்கிறார் என்பதனை கருப்பொருளாக வைத்தே கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
அமிர்தாவை கடிந்த பாட்டி
இந்த நிலையில், ஜெனி இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். இதனால் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள்.
திருமணமாகி குழந்தையுடன் வந்த அமிர்தா எழிலுக்காக இன்னும் ஒரு குழந்தை கூட பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்.
ஜெனியை வாழ்த்திய ஈஸ்வரி, அமிர்தாவை பார்த்து குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு கோபமாக கூறியுள்ளார். இதனால் அமிர்தா மனமுடைந்து அழுதுக் கொண்டே செல்கிறார்.
இது ஒருபுறம் இருக்கையில், நல்ல செய்தி கேட்டு ஜெனியின் அப்பா- அம்மா பாக்கியா வீட்டிற்கு வந்துள்ளனர். அந்த சமயம் பார்த்து செழியன் வீட்டிற்குள் வருகிறார்.
செழியன் செய்த தவறுகள் அனைத்தையும் மன்னித்து ஜெனியின் பெற்றோர் பேசுவார்களா? என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |