பாசத்தோடு ஓடி வந்த கோபி.. அப்பாவை உதறி தள்ளிய இனியா- கடுப்பில் குடும்பத்தினர்
இனியா பாக்கியாவுடன் இருந்தால் சரி வராது என நினைத்து இனியாவை தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக கோபி வீட்டிற்கு வருகிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில்களில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது.
அதே சமயம் இயக்குனர், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரச்சனையை வைத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறார்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் குடும்ப பெண்ணாக இருந்து பாக்கியா எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் மற்றும் குடும்பத்திற்காக என்னென்ன விடயங்களை தியாகம் செய்கிறார் என்பதனை கருப்பொருளாக வைத்தே கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அவமானத்தில் வெளியேறிய கோபி
இந்த நிலையில் இனியா, நைட்டி பார்ட்டிக்கு சென்று பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்.
இனியாவால் அசிங்கப்பட்ட பாக்கியா வீட்டிற்கு வந்ததும் மனமுடைந்து ஓரமாக அமர்ந்து அழுகிறார். பின்னர் இனியா, பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கலாம் என பக்கத்தில் வருகிறார். கடுமையாக கோபமடைந்திருந்த பாக்கியா இனியாவை சரமாறியாக அடிக்கிறார்.
இதனை தொடர்ந்து இனியா பற்றிய பிரச்சினையை செழியன், ராதிகா மூலம் தெரிந்து கொண்ட கோபி இனியாவை தன்னுடன் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் பாக்கியாவிடம் சண்டை பிடிக்கிறார்.
பின்னர், இனியாவிடம் வந்து தன்னுடன் வரும்படி கேட்கிறார், இனியா மீதுள்ள கோபியின் கையை ஈஸ்வரி உதறி தள்ளி விட்டு, “ வீட்டை விட்டு வெளியே போ..” என கோபமாக கூறுகிறார்.
இனியாவை அனுப்பினால் ஈஸ்வரிப் போல் அவரும் ஏதாவது பிரச்சினையில் சிக்கி விடுவார் என்ற பயம் வீட்டிலுள்ள அனைவருக்கும் இருக்கிறது. மகளை அழைத்து செல்ல வந்த இடத்தில் அவமானத்துடன் கோபி வெளியேறுகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |