உதவி கேட்ட ராதிகா.. மனம் இறங்கிய பாக்கியா- இருவரையும் சேர்த்து வைப்பாரா?
கோபியை இழந்த ராதிகா யாரிடம் பேசுவது என தெரியாமல் கடைசியாக பாக்கியாவிடமே உதவி கேட்டு வந்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி, இனியா, செழியன் மூன்று பேருக்கும் ஈஸ்வரி சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்க எல்லோரும் சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது “இனியா கல்யாணத்தை கிராண்டா பண்ணிடு கோபி, நான் அதுவரைக்கும் இருக்க மாட்டேன்“ என்று ஈஸ்வரி சொல்ல, அதற்கு கோபி “நீங்க இனியா கூட குழந்தையின் கல்யாணத்தையும் பார்ப்பீங்க” என சொல்கிறார்.
இப்படி அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அதே மறுபக்கத்தில் பாக்கியா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஜெனி செல்வி மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது “இனியாவின் ஸ்டேட்டஸை பாத்தீங்களா?” என கேட்க,“ இல்லையே போன் தூரமா இருக்கு..” என பாக்யா சொன்னதும் ஜெனி போனில் ஸ்டேட்டஸ் காட்டுகிறார். அதில் கோபிக்கு ஈஸ்வரி சாப்பாடு ஊட்டும் போட்டோ ஒன்று இருக்கிறது.
அதனை பாக்யா பார்த்து விட்டு டென்ஷன் ஆகி “இவங்க பண்ற அலம்பல் தாங்க முடியல.. கொஞ்ச நாளைக்கு முன்னாடியே பையனே இல்லைன்னு தலை முழுங்குறாங்க. இந்த இனியாவும் செழியணும் அவர் பண்ணுனதெல்லாம் தப்புன்னு சொன்னாங்க ஆனா இப்போ நம்புறாங்க..” என பேசுகிறார்.
உதவி கேட்ட ராதிகா
இந்த நிலையில், இனியாவின் ஸ்டேட்டஸை பார்த்த ராதிகா வீட்டை காலி செய்து விட்டு மகளையும் அம்மாவையும் புது வீட்டிற்கு அனுப்புகிறார். ஆனால் அவர் கோபியின் நினைவுகளுடன் தனியாக பழைய வீட்டில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது உள்ளே வந்த பாக்கியா,“ தனியாக இருக்க வேண்டாம், எங்க வீட்டிற்கு சரி வாங்கள்..” என அழைக்கிறார்.
அதனை மறுத்த ராதிகா,“ கொஞ்சம் நேரம் என்னோடு இங்க இருக்க முடியுமா? என கேட்ட பாக்கியாவும்“சரி” என அமர்ந்திருக்கிறார். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் இருவரும் கோபியால் பாதிக்கப்பட்டு அமர்ந்திருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |