நெஞ்சு வலியில் போராடும் கோபி.. கடைசி தருணத்தில் பாக்கியா உதவிக்கு வருவாரா?
நெஞ்சு வலியால் போராடும் கோபி பாக்கியாவிடம் உதவி கேட்க கோல் செய்கிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி போட்ட திட்டம்படி அனைத்து வேலைகளும் நடந்து வந்தது.
கோபியின் திட்டப்படி அவருடைய மூன்று பிள்ளைகளில் செழியன் மற்றும் இனியாவை அவர் பக்கம் சாய்த்து விட்டார். மிச்சமாக இருந்தது எழில் மட்டும் தான்.
அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து கொண்டிருந்த கோபி, எழிலின் பட விழாவிற்கு வர வேண்டாம் என கூறுமாறு தயாரிப்பாளரிடம் கூறி விடுகிறார்.
இவர் நினைத்தது போன்று எழில் தடுத்தாலும், படத்தின் பெயராக அம்மா பெயரை வைத்து கோபிக்கே டுவிஸ்ட் கொடுத்து விட்டார். “இது என்னுடைய அம்மாவின் பெயர் அவர் பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் சொல்லும் விதமாக இந்த படத்தை எடுக்கப் போகிறேன்..” என்கிறார் எழில்.
இதற்கிடையில் பாக்கியாவின் கேன்டீன் சீல் கோபி தான் காரணம் என்ற உண்மை அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இதனால் கடுப்பான பாக்கியா பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்து கோபியை கைது செய்யும் படி செய்துள்ளார்.
நெஞ்சு வலியால் துடிக்கும் கோபி
இந்த நிலையில் பிரச்சினை முற்றிய வேளையில் உண்மையை அறிந்த இனியா, “ வீட்டில் நடக்கும் அத்தனை பிரச்சினைக்கு நீங்கள் தான் காரணம், எங்களுடைய நிம்மதி அனைத்தையும் நீங்கள் தான் இல்லாமாக்கி விட்டீர்கள். அம்மாவை பலி வாங்க நினைத்து நீங்கள் செய்யும் அனைத்து விடயங்களும் எங்களுக்கும் தெரியும்..” என கதறியழுத்தப்படி கூறி விடுகிறார்.
இந்த யோசனையுடன் செல்லும் கோபி காரை ஒரு பக்கம் நிறுத்தி விட்டு நெஞ்சு வலியால் துடிக்கிறார். இதனை தொடர்ந்து “தனக்கு நெஞ்சு வலி வந்து விட்டது..” எனக் கூறுவதற்கு ராதிகாவிற்கு கோல் செய்கிறார். அவர் எடுக்கவில்லை.
பின்னர் பாக்கியாவிற்கு கோல் செய்கிறார், “இரவில் கோபி எதற்காக தனக்கு கோல் செய்கிறார்..” என யோசித்து கொண்டே பாக்கியா போனை பார்த்து கொண்டிருக்கிறார். ஆனால் முன்னாள் கணவரின் இறுதி தருணத்தில் அவருக்கு பாக்கியா உதவிச் செய்வார் என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |