உண்மையறியும் இனியா.. கொத்தாக மாட்டிய மாமனார்- இனி நடக்கப்போவது என்ன?
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு எதிராக பல வேலைகளை அமைதியாக பார்த்து வரும் சுதாகர் இனியாவிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. சமூகத்தில் ஆண்களால் கைவிடப்பட்ட பெண்களாலும் சாதனை செய்ய முடியும் என்பதனை கருவாகக் கொண்டு சீரியல் நகர்த்தப்படுகிறது.
அந்த வகையில், கோபி, ஈஸ்வரியும் சேர்ந்து இனியாவுக்கு நல்லப்படியாக திருமணம் செய்து வைத்து விட்டார்கள். ஆனால் ஹோட்டலுக்காக வந்த சுதாகர் அதனை பரிசாக கொடுக்கும்படி, பத்திரம் கொடுத்து கையெழுத்து வாங்கிவிட்டார்.
இதனை தொடர்ந்து பாக்கியாவுக்கு அடுத்தடுத்து பிரச்சினை கொடுத்து வருகிறார். இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் வீட்டிலுள்ளவர்களிடம் பாக்கியா புலம்பி வந்தார்.
உண்மையறியும் இனியா
எவ்வளவு அடிகள் விழுந்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் பாக்கியா இருப்பதால் சிறிய இடத்தில் பாக்கியலட்சுமி மெஸ் என்ற பெயரில் சிறிய ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.
வழக்கமாக பாக்கியலட்சுமி திறக்கும் ஹோட்டல்களுக்கு அவருடைய மாமியார் பெயர் தான் வைப்பார். ஆனால் இந்த ஹோட்டலுக்கு பாக்கியலட்சுமி பெயர் தான் வைத்திருக்கிறார்.
சுதாகர் சூழ்ச்சியில் சிக்கிய இனியா உண்மையில் என்ன நடக்கிறது என்பதனை எழில் மூலம் தெரிந்து கொள்கிறார். கடந்த வாரம் வெளியான ப்ரோமோ மாமனாரிடம் ஹோட்டல் குறித்து பேசுவது போன்று காட்டப்பட்டது.
அண்ணனிடம் இருந்து உண்மையை அறிந்து கொண்டு பாக்கியாவிற்கு துணையாக இனியா நிற்பார் என சின்னத்திரை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |