பாக்யாவிடம் சண்டைக்கு நிக்கும் ராதிகாவின் மறு பக்கம்: கண்கலங்க வைக்கும் பதிவு!
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மாவின் வாழக்கையில் ஏற்பட்ட பல சம்பவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பாக்கியலட்சுமி ராதிகா
பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இதில் ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா, இதற்கு முன் மசாலா படம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய திருப்பமே பாக்கியலட்சுமி சீரியல் தான். ராதிகா பாக்கியாவிற்கு வாழ்க்கையில் புகுந்து கோபியை சொந்தமாக்கி பாக்யாவிற்கு அப்பப்போது கொடைச்சல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவரின் நேர்காணல் ஒன்றில் தன் மகனுடன் இணைந்து வாழ்க்கையில் பட்ட சங்கடங்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.