கடற்கரையோரத்தில் கோபியுடன் ஆட்டம் போடும் ராதிகா- எழிலும் இருந்தார?
கடற்கரையோரத்தில் கோபியுடன் ஆட்டம் ராதிகாவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரேஷ்மா பசுபலேட்டி
சின்னத்திரையில் பிரபல நடிகையாக ரேஷ்மா பசுபலேட்டி செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்.
இவர், விஜய் தொலைகாட்சி, ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் நாடகங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.
தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட ரேஷ்மா தமிழில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
கோபியுடன் ஆட்டம் போடும் ராதிகா
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா பாக்கியலட்சுமி சீரியலில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அதில், கோபி மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் இணைந்து சுற்றுலா செல்லப்போவதாக திட்டம் போடுகிறார். அதற்கு பாக்கியாவிடமும் அனுமதி கேட்கிறார்.
இப்படியொரு சமயத்தில் கடற்கரையில் கோபியுடன் நடனம் ஆடுவது போன்று ஒரு காணொளியை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில் செழியன் மற்றும் எழிலும் இருக்கிறார்கள்.
காணொளியை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள்,“குடும்பம் ஒன்றாக சேர்ந்து விட்டதா?” எனக் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |