2ஆவது மனைவியால் ஏமாந்து போய் நிற்கும் கோபி... இப்படி ஒரு பரிதாப நிலையா? ஷாக்கிங் வீடியோ
நாளுக்கு நாள் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
தற்போது வெளியான ப்ரோமோ மேலும் நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
ப்ரோமோவில் கோபி அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்ததும் ராதிகா அவரை கண்டுகொள்வதே இல்லை.
காபியை ஆர்டர் பண்ணணுமா?
காபி கிடைக்குமா என அவர் கேட்டால் ஆர்டர் பண்ணிக்கோங்க என கூலாக சொல்லிவிட்டு போகிறார்.
அதன் பின் பசிக்கிறது என சொன்னாலும் அதே பதில் தான். அதன் பின் ராதிகா கிச்சன் சென்று சமைக்கின்றார். பக்கத்துக்கு வீட்டில் பாக்யா செய்த பிரியாணி வாசம் கோபியை இழுக்கிறது.
ராதிகா தான் பிரியாணி செய்கிறார் என அவர் நம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால் டேபிளில் சாப்பிட அமர்ந்தால் கோபிக்கு பழைய கஞ்சி போல எதையோ ராதிகா கொண்டு வந்து கொடுக்கிறார்.
அதை பார்த்து ஷாக்கான கோபி மனதிற்குள் புலம்புகிறார். இப்படி விறுவிறுப்பாக கட்டங்களுடன் சுவாரஷ்யம் குறையாமல் நிகழ்ச்சி தொடர்வது பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.