ராதிகாவை வீட்டை விட்டு துரத்திய கோபி- கோர்ட்டில் ஆஜராகவுள்ள மயூ- Master plan போட்ட பாக்கியா
பாக்கியலட்சுமியில் தனது அம்மாவிற்கு எதிராக கிளம்பிய ராதிகாவையும் அவரது அம்மாவையும் கோபி வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், கமலா ஈஸ்வரி தன்னுடைய பேரக்குழந்தையை கொன்று விட்டதாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் ஈஸ்வரியை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ஈஸ்வரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
வீட்டை விட்டு விரட்டிய கோபி
இந்த நிலையில், தன்னுடைய அம்மாவின் இந்த நிலைக்கு ராதிகாவைவும் அவரது அம்மாவைவும் கோபி வீட்டை விட்டு வெளியே போகுமாறு கடுமையாக கூறியுள்ளார்.
மேலும் ராதிகாவின் அம்மா, “ இது என்ன உங்க வீடா?” என கேட்க, “ யார் வீடாக இருந்தாலும் சரி நீங்க இரண்டு பேரும் வெளியே போங்க...” என பேசியுள்ளார்.
கோபமடைந்த கமலா ராதிகாவை அழைத்து கொண்டு அவரின் மகன் வீட்டிற்கு செல்வார் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பாக்கியா, மயூவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி உண்மையை வெளியே கொண்டு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |