ஆகாஷ் உடன் கள்ளக்காதலா? பொங்கிய கணவருக்கு நேர்ந்த கதி- பயத்தில் பாக்கியா குடும்பம்
கணவரை பிரிந்து வாழ முடிவு செய்த இனியா செய்த தவறால் ரித்திஷின் உயிர் ஆபத்தில் உள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த 5 வருடங்களாக வெற்றிநடைப்போட்டுக் கொண்டிருக்கிறது.
பாக்கியா- கோபி அவரது குடும்பத்தில் ஆரம்பித்த கதைக்களம் பிள்ளைகளின் திருமணம் வாழ்க்கை மற்றும் கோபி அப்பாவின் இறப்பு என பலவிதமான வழிகளில் சென்று தற்போது இனியாவின் திருமண வாழ்க்கை பற்றிய கதை ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் பணத்திற்கு ஆசைப்பட்டு, இனியாவை கோபி ரித்திஷ் எனும் தொழிலதிபர் சுதாகரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். அதற்கு ஈஸ்வரியும் பெரிய ஆதரவாக இருந்தார்.
ஆனால் சுதாகர் மகனை திருமணம் செய்வதில் பாக்கியாவிற்கு துளியளவும் விருப்பம் இல்லை. இருந்தாலும் குடும்பத்திற்காக அவரது முடிவு மாற்றிக் கொண்டு திருமணத்தை நல்லபடியாக உடன் இருந்து செய்து வைத்தார்.
திருமணமாகி கொஞ்ச நாட்கள் சந்தோஷமாக வாழ்ந்த இனியா, கணவரின் தீய பழக்கங்களினால் பழைய நிலையை விட மோசமான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்.
உயிருக்கு போராடும் ரித்திஷ்
இந்த நிலையில், ரித்திஷின் போதைப்பழக்கம் கோபி- பாக்கியாவிற்கு தெரியவர இனியாவை அழைத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறார்கள். ஆனாலும், அடங்காத சுதாகரும் அவரது மனைவியும் தேவையில்லாமல் பிரச்சினை செய்து வருகிறார்கள்.
இனியாவை அசிங்கப்படுத்தி பேச தொடங்கி விட்டார்கள். இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் இனியா விவாகரத்து கேட்கிறார். அதனை வாங்கி தர பாக்கியா- கோபி இருவரும் முடிவு செய்து, இனியாவது இனியா எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வாழ வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
மனைவி ஆகாஷ் உடன் தொடர்பில் இருப்பதாக தவறாக புரிந்து கொண்ட ரித்திஷ் இனியாவை தனியாக அழைத்து தவறாக நடக்க முயற்சிக்கிறார். அப்போது பயத்தில் இனியா தள்ளி விட கீழே விழுந்த ரித்திஷிற்கு பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார்.
இனியாவுக்கு வந்த அடுத்த பிரச்சினையில் இருந்து காப்பாற்ற பாக்கியா வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |