தாத்தாவாகிய கோபி! புதுமனைவியுடன் நிற்கையில் மூக்கை உடைத்த தந்தை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தாத்தாவாகிய விடயத்தினை கொள்ளு தாத்தாவாகிய கோபியின் அப்பா கூறி மூக்கை உடைத்த ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது.
பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்த நிலையில், ராதிகாவை திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
கோபியின் மூக்கை உடைத்த அப்பா
இந்நிலையில் ராதிகாவை திருமணம் செய்து கொண்டு அவரது வீட்டில் சாப்பாட்டுக்கு மிகவும் சிரமப்படும் கோபியின் நிலை தற்போது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கோபி அங்கு சுதந்திரமாகவும் இருக்கமுடியாமல் தவித்து வருகின்றார். இந்நிலையில் செழியன் மனைவி கர்ப்பமாக இருப்பதால், கோபி தாத்தாவாகியுள்ளார்.
கோபியின் தந்தை கொள்ளு தாத்தா ஆகியதால், புதுமனைவி முன்பு இந்த விடயத்தைக் கூறி கோபியின் மூக்கை உடைத்துள்ளார்.