மருமகள் வளைகாப்பில் பாக்கியாவிற்கு ஏற்பட்ட அவமானம்! கோபியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மருமகள் ஜெனிபரின் வளைகாப்பு நிகழ்ச்சியில், கோபி செய்த செயல் பலரையும் கடுப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவை விட்டு கோபி ராதிகாவுடன் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார்.
இனியாவும் தனது தந்தையுடன் வாழ்ந்து வரும் நிலையில், இடையில் பாக்கியாவிற்கு கிடைத்த ஆர்டரை ராதிகா வில்லியாக மாறி தட்டிவிட்டார்.
இதனால் குறித்த சீரியல் இன்னும் சற்று எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாக்கியாவின் மருமகள் ஜெனிஃபருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதில் கோபி தனது இரண்டாவது மனைவி ராதிகாவை அழைத்துக் கொண்டு வந்த நிலையில், பல அலப்பறைகளையும் செய்துள்ளார்.
இதனை தற்போது அவதானித்த ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.