Baakiyalakshmi: எனக்கு ஒரே ஒரு மகள் தான்.... கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி! பேரதிர்ச்சியில் குடும்பம்
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை தனது பிள்ளை இல்லை என்று ஈஸ்வரி நடுவீட்டில் நின்று தலைமுழுகிய காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. துரோகம் செய்யும் கணவருக்கு எதிராக சிங்கமாக வாழ்ந்து வரும் பெண்ணின் கதையை கொண்டு செல்கின்றது.
இந்த சீரியலில் சமீபத்தில் ராதிகாவின் குழந்தை கலைந்துவிட்டதற்கு, ஈஸ்வரி தான் காரணம் என்று ராதிகாவும், அவரது அம்மாவும் கூறி அவரை ஜெயிலுக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் கடைசி நிமிடத்தில் பாக்கியா மயூவிடமிருந்து உண்மையை தெரிந்து கொண்டு, அவரையே நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
பின்பு ஈஸ்வரி குற்றவாளி அல்ல என்பது உறுதி செய்யப்பட்டதுடன், அவரை விடுதலை செய்துள்ளனர். வீட்டிற்கு வந்த ஈஸ்வரியை பாக்கியா நன்றாக கவனித்துக் கொள்கின்றார்.
தற்போது வெளியாகிய ப்ரொமோ காட்சியில் ஈஸ்வரியிடம் கோபி மன்னிப்பு கேட்க வந்திருந்த நிலையில், கோபியை தனது பிள்ளை இல்லை என்று கூறி தலைமுழுகியுள்ளார் ஈஸ்வரி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |