Baakiyalakshmi: மிஸ்டர் ராமமூர்த்தி பெயருக்குத் தான் எனக்கு அப்பா... உண்மையை கொட்டித் தீர்த்த கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தனது தந்தை ராமமூர்த்தியைக் குறித்து தாறுமாறாக அனைவரின் முன்பு பேசியுள்ளது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஆயிரம் எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில், இதில் பாக்கியாவின் மாமனார் ராமமூர்த்தி திடீரென உயிரிழந்துள்ளார்.
அவருக்கு இறுதி காரியம் அனைத்தையும் பாக்கியா செய்துள்ள நிலையில், கோபி இதனால் கோபத்தில் காணப்படுவதுடன், பாக்கியாவை பழிதீர்க்கவும் வகை தேடி வருகின்றார்.
இந்நிலையில் மறைந்த ராமமூர்த்திக்கு துக்கநிவர்த்தி கூட்டம் நடைபெற்ற நிலையில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவரைக் குறித்து பெருமையாக பேசியுள்ளனர்.
ஆனால் அழையா விருந்தாளியாக வந்த கோபி, தனது தந்தை என்றும் பாராமல் தனது தந்தையை தாறுமாறாக பேசியுள்ளார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உள்ள நிலையில், அடுத்து நடக்கவிருப்பது என்ன என்பது தெரியாமல் குழப்பத்தில் பார்வையாளர்கள் உள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |