Baakiyalakshmi: இனியாவிற்கு அப்பாவே இல்லை... கல்லுரியில் உண்மையை உடைத்த ஈஸ்வரி
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் கல்லூரிக்கு தனது அத்தை மாமாவுடன் வந்த பாக்கியாவிற்கு அதிர்ச்சியளிக்கும் விடயம் நடந்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் இதன் கதைகளம் மாறிக்கொண்டே இருக்கின்றது.
துரோகம் செய்யும் கணவருக்கு எதிராக சிங்கப்பெண்ணாக வாழ்ந்துவரும் பெண்ணின் கதையைக் கொண்டு ஒளிபரப்பாக்கப்படுகின்றது.
என்னதான் மகன் தவறு செய்தாலும் அவனுக்கே சப்போட்டாக இருந்த தாய் மருமகளின் பாசத்தை புரிந்துகொண்டு மனமாறியுள்ளார்.
தற்போது பாக்கியாவிற்கு முழு ஆதரவை அளித்து வரும் ஈஸ்வரி, இனியாவின் கல்லூரிக்கு சென்றுள்ளார். கல்லூரிக்கு சென்றதும் இனியாவின் சான்றிதழை வாங்கிக்கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
இனியாவின் அப்பா குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஈஸ்வரி ஆதங்கத்தில் அனைத்து உண்மையையும் கூறியதுடன், இனியாவிற்கு அப்பாவே இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதனை அறிந்து கொண்ட கோபி கோபமாக வீட்டிற்கு வந்து சத்தம் போட்டதுடன், அனைவருக்கும் எச்சரிக்கை கொடுத்தும் சென்றுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |