Baakiyalakshmi: மயங்கி விழுந்த ஈஸ்வரி... பரிதவித்து நிற்கும் கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அம்மாவிற்கும், ஈஸ்வரிக்கும் இடையே சண்டை ஏற்படும் நிலையில், கோபியின் நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
வீட்டில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து கெத்து காட்டி வருகின்றார் பாக்கியா. ராதிகாவின் கர்ப்பத்தால் கோபியை அனைவரும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
கோபியுடன் சேர்ந்து அவரது தாய் ஈஸ்வரியும் ராதிகாவின் வீட்டிற்கு வந்துள்ளார். தற்போது ராதிகா வீட்டில் ஈஸ்வரியை இருப்பதற்கு அனுமதிக்காமல் கோபியிடம் சண்டையிட்டு வருகின்றனர்.
கோபியிடம் ராதிகாவும், அவரது அம்மாவும் சண்டையிட்டதை கேட்ட ஈஸ்வரி சோகத்தில் ஆழ்ந்ததுடன், மயங்கியும் கீழே விழுந்துள்ளார்.
ராதிகாவும் பாக்கியா மாதிரி உங்க அம்மாவை என்னால் பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |