Baakiyalakshmi: உதாசினப்படுத்திய தாய்... பாக்கியாவை ஒன்னுமில்லாமல் ஆக்குறேன்! சவால் விடும் கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் தனது தாய் தன்னை உதாசினப்படுத்திவிட்டு செல்வதால், கோபமடைந்த கோபி பாக்கியாவை ஒன்றுமில்லாமல் அழிப்பதாக ராதிகாவிடம் சவால் விட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஆயிரம் எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில், இதில் பாக்கியாவின் மாமனார் ராமமூர்த்தி திடீரென உயிரிழந்துள்ளார்.
இவரது இறுதி காரியத்தை பாக்கியா தான் செய்ய வேண்டும் என்று ஈஸ்வரி ஒரு முடிவாக இருந்ததால், அவரே இறுதி காரியத்தை செய்துள்ளார்.
இதனால் கோபி கடும் கோபத்தில் காணப்பட்டதுடன், பாக்கியாவை எவ்வாறு பழிதீர்ப்பது என்ற யோசனையில் இருந்து வருகின்றார்.
இந்நிலையில் தனது தாய் ஈஸ்வரி தன்னை மிகவும் மோசமாக பேசி உதாசினப்படுத்தியதால், இதற்கு காரணம் பாக்கியா தான் என்றும் அவரை ஒன்றுமில்லாமல் ஆக்குவதாக கோபி ராதிகா முன்பு கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |