Baakiyalakshmi: கணவரின் கடைசி ஆசைக்காக பிடிவாதமாக நிற்கும் ஈஸ்வரி... ராதிகா அம்மாவின் சதி
பாக்கியலட்சுமி சீரியலில் இறந்த கணவரின் இறுதி ஆசையை நிறைவேற்ற ஈஸ்வரி அனைவரிடமும் சண்டையிட்டு வருகின்றார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ஆயிரம் எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. நடுத்தர குடும்ப பெண் புகுந்த வீட்டில் சந்திக்கும் பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் நின்று சமாளிக்கும் பாக்கியா தற்போது உடைந்து போயுள்ளார். ஏனெனில் இரவில் தன்னுடன் பேசிய மாமனார் காலையில் உயிருடன் இல்லை என்ற அதிர்ச்சி குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராமமூர்த்தியின் இறப்பால் அதிர்ச்சியில் இருக்கும் குடும்பத்தில் தற்போது பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. கோபியை இறுதி காரியம் செய்யக்கூடாது என்று ஈஸ்வரி தடுத்துள்ளார்.
இதனால் வீட்டிற்கு வந்த பலரும் ஈஸ்வரியை கேள்வி கேட்டு வருகின்றார். ஆனால் எதற்கும் அஞ்சாத ஈஸ்வரி தனது முடிவில் உறுதியாகவே இருக்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |