பாக்கியாவிற்கு ஏட்டிக்கு போட்டியாக களமிறங்கிய ராதிகா! இனி என்ன செய்ய போகிறார் கோபி?
கோபியை மிரட்டி பாக்கியாவில் தங்க ராதிகா திட்டம் போட்டுள்ளார்.
பாக்கியலட்சுமியின் திருப்பம்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த தொடரில், ராதிகா, கோபி, பாக்கியா, செழியன், பாட்டி, தாத்தாஆகிய கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
மேலும் கூட்டு குடும்பத்தில் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த குடும்பத்தின் நிலைப்பாடு குறித்து அழகாக சமூகத்திற்கு எடுத்து கூறும் வகையில் கதைக்களம் நகர்த்தப்பட்டு வருகிறது.
நாங்க இங்க தான் இருப்போம்
இதனை தொடர்ந்து ராதிகா - கோபியுடன் தான் இருப்பேன் என பாக்கியாவின் வீட்டிற்குள் வந்துள்ளார்.
இதனால் வீட்டிலுள்ள அனைவரும் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். “என்னை வெளியில் அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன்” எனவும் கோபியை மிரட்டியுள்ளார்.
இதனால் செழியனும், எழிலும் பாக்கியாவிற்கு சார்பாக கோபியை பார்த்து,“ எப்போ வெளியே போவீங்க” என கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
ஆனால் ராதிகா,“நாங்க இங்க தான் இருப்போம்,” என உறுதியாக கூறி விட்டு கோபியை அழைத்து சென்றுள்ளார்.
இந்த காட்சியை பார்த்து வீட்டிலுள்ள அனைவரும் குழம்பி போயுள்ளதுடன், பாக்கியாவின் இக்கட்டான நிலையும் அவர்கள் புரிந்து கொண்டு ஆறுதல் கூறி வருகிறார்கள்.